கதிர்காம
 பாதயாத்திரையை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கான 24 மணி நேர வைத்திய 
சேவையொன்று குமுக்கன் நதியோரத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது .
கிழக்கு மாகாணத்தையும் ஊவா மாகாணத்தையும் பிரிக்கும் எல்லையில் உள்ள குமுக்கன் நதி தீரத்தில் வைத்திய முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் நிசங்கவின் ஏற்பாட்டில் அந்த சேவை நடைபெற்று வருகிறது.
அம்பாறை
 பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்திரசேன தலைமையிலான வைத்தியர்
 குழுவினர் இச் சேவையை 24 மணி நேரமும் நிகழ்த்தி வருகின்றனர்.
இச்
 சேவை தொடர்பாக பணிப்பாளர் டாக்டர் நிஸங்க, பணிப்பாளர் டாக்டர் ரங்க, 
சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் சுப்பிரமணியம் புனிதராஜன் மற்றும் 
வைத்தியர்கள் களத்தில் நின்று கண்காணித்து வருகின்றார்கள்.
இங்கு இம்முறை புதிதாக நடமாடும் வைத்திய  பஸ் சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது .
அவசர அவசிய சிகிச்சைகள் மற்றும் ஏனைய விடயங்களுக்காக இந் நடமாடும் பஸ் சேவை 
நடைபெற்றுவருகிறது.
அத்துடன்
 24   மணி நேரமும் இயங்கக்கூடிய வண்ணம் அன்புலன்ஸ் சேவை ஒன்றும் அங்கே 
ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது . நாவலடியில் இயங்கிவரும் மருத்துவ முகாமில் 
இருந்து மேலதிக அவசர அவசிய சிகிச்சைகளுக்காக குமுக்கன் பிரதான வைத்திய 
முகாமிற்கு நோயாளிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அருகில் கல்முனை ஆதரவைத்தியசாலையின் சேவையும் தொடர்கிறது.
திருவிழா
 மற்றும் யாத்திரைக்காக வழமைபோல் நியமிக்கப்படும் பிராந்திய சிரேஸ்ட பொதுச்
 சுகாதார பரிசோதகர் சுப்பிரமணியம் புனிதராஜன்   24 மணி நேரமும் களத்தில் 
நின்று வழமைபோல் பாதயாத்திரீகர்களின் சுகாதார சேவைகளை கவனித்து 
வருகின்றார்.
இதேவேளை அம்பாறை
 மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் குமண வனஜீவராசிகள் திணைக்கள 
பொறுப்பதிகாரி விமலசேன உள்ளிட்ட குழுவினர் பாதையாத்திரை நலன்புரிவசதிகளை 
கண்காணித்து வருகின்றார்கள்..
( குமுக்கனிலிருந்து  வி.ரி.சகாதேவராஜா)
 



 
 




 
 
 
 
.jpeg) 
