தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் "நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவோம்" - கதிர்காம பாத யாத்திரை - 2025




































"நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் கதிர்காம பாத யாத்திரை கடந்த இரண்டு  வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில் இவ்வருடம் மூன்றாவது தடவையாக பாத யாத்திரையினை முன்னெடுக்கவுள்ளனர்.

அதனை முன்னிட்டு இவ்வருடத்திற்கான பாத யாத்திரையானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சுபுன் விஜயவர்த்தன அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் (நிருவாகம்)  மனுல சமன் பெறேரா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் உப்புல் ஆகியோரது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் திருமதி.நிஷாந்தி அருண்மொழி மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்
மனுல சமல் பெரேரா,
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் சசிகுமார் மற்றும் திருமதி சதீஸ்வரி மற்றும் தயாசீலன் ஆகியோர் இதனை ஒருங்கிணைத்து செயற்திட்டத்தை  வழி நடாத்தியிந்தமையும் குறிப்பிடத்தக்கது .
 மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற  பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து யாத்திரையில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்காக உருத்திராட்சம் மாலை அணிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் யாத்திரைக்கு பொருத்தமான காவி உடைகள் என்பன வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து, உகந்தை முருகன் ஆலயம் வரைக்குமான பஸ் பயணம் இன்று (20) திகதி காலை 9.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.