சுமார் 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் ஒருவருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை

 


சுமார் 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் ஒருவருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
முனைவர் பட்டப்படிப்பை கற்றுவரும் மாணவர் ஒருவருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
சீன நாட்டவரான குறித்த மாணவர், 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மே வரை லண்டனில் மூன்று பெண்களையும், சீனாவில் மேலும் ஏழு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
 
குறித்த பெண்களுக்கு போதைப்பொருள் வழங்கி இந்த குற்றத்தை அவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இந்த 10 பெண்களை தவிர்த்து மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.