ஓட்டமாவடி தேசிய படசாலை பழைய மாணவர்களது நடைபவனி.





 

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 109 வருட நிறைவை முன்னிட்டும் பழைய மாணவர் அமைப்புக்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்று போட்டி சீசன் திரி (03) ஆகியவற்றை முன்னிட்டும் இன்று சனிக்கிழமை (24.05.2025) பழைய மாணவர்களால் நடைபவனி இடம் பெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக ஓய்வு பெற்ற கோட்ட கல்வி அதிகாரி ஏ.எம்.ஏ.காதர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக பழைய மாணவர் சங்க செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.றாசீக், கிரிக்கட் சுற்றுப்போட்டியின் முகாமையாளர் ஆர்.எம்.புஹாரி மற்றும் பழைய மாணவர் சங்க பிரிதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நடைபவனி பாடசாலை முற்றத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதிவழியாக ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி, மீறாவோடை மீறாஜூம்ஆ பள்ளிவாயல் சந்தியை அடைந்து அங்கிருந்து மீறாவோடை அல் ஹிதாயா வீதி மற்றும் ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ்.வீதியூடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

நடைபெறவுள்ள சீசன் திரி (03) கிரிக்கட் சுற்று போட்டியில் பழைய மாணவர் அமைப்புக்களில் இருந்து இருபத்தெட்டு கழகங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கிரிக்கட் சுற்றுப்போட்டியின் முகாமையாளர் ஆர்.எம்.புஹாரி தெரிவித்தார்.