காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரின் அத்துமீறலைத் தடுக்கும் வகையில் காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து காசா பகுதிக்கான உதவி 11 வாரங்களுக்கு நிறுத்தப்பட்டது.
இதில் மனிதாபிமான உதவி, உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் அடங்கும்.அங்கு, மனிதாபிமான உதவி வழங்குவதை நிறுத்தியதால், 2.1 மில்லியன் பாலஸ்தீனிய மக்களுக்கு பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காசா பகுதியில் உள்ள ரோஹாவை குறிவைத்து இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை நடத்தியதில் குழந்தைகள் உட்பட 140 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், இஸ்ரேலியப் படைகள் வடக்கு மற்றும் தெற்கு காசாவில் பரந்த தரைவழி நடவடிக்கையை ஆரம்பித்தன.
கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் கிட்டத்தட்ட 160 தாக்குதல்களை நடத்தியுள்ளது.இதற்கிடையில், 11 வாரங்களுக்குப் பிறகு காஸாவுக்கு அடிப்படை உணவுகளை வழங்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.