தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டு மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு

 






தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு அரசாங்கத்தினால் பல சமூக சேவை நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன

 இதே வேளை மட்டு   மாநகர  சபையால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு  இன்று காலை  மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் மாநகர சபையின் ஆணையாளர் எஸ் தனஞ்ஜெயன் தலைமையில் இடம்பெற்றது

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடனும் நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மட்டு வாவியினை துப்பரவு  செய்யும் நோக்குடனும் இன்றைய தினம் இந்த விசேட  சிரமதான நிகழ்வு முன்னெடு க்கப்பட்டது

 மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர்கள் கலந்துகொண்டு நகரை அழகுபடுத்தும் பணிகளை முன்னெடுத்தனர்.

 வரதன்