மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கான சுகாதார கருத்தரங்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்றது .


 



















மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட 120 முன் பள்ளி ஆசிரியர்களுக்கான சுகாதார கருத்தரங்கு 2/5/2025 அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை Doctor சதுர்முகம் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது .  
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளிஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக முன் பள்ளி கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் கலந்து கொண்டார்.
முன்பள்ளி குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து , முதல் உதவி மேலாண்மை மற்றும் தாய் சேய் மருத்துவர் கிரிசுதன்,  முன்பள்ளி சுகாதார மேம்பாடு  மருத்துவ அதிகாரி   அச்சுதன்  
மற்றும் சமூகச் சிறுவர் நல மருத்துவ நிபுணர் பிரார்த்தனா  ஆகியோர்  கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் முன் பள்ளி ஆசிரியர்கள் 3-5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை எவ்வளவு பாதுகாக்க வேண்டும் அவர்களுக்கான முதலுதவிகளை எவ்வாறு மேற் கொள்ள வேண்டும் முதலுதவி செய்யும்  முறைகள் , பிள்ளை வளர்ச்சி ,பிள்ளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள்.எவ்வாறான ஊட்டச்சத்து உணவுகளை மேற் கொள்ள வேண்டும்.என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது மற்றும் விசேட தேவை உள்ள பிள்ளைகளின் செயற்பாடுகள் அவர்களை கையாளும் விதங்கள் அவர்களுக்கு எவ்வாறு மருத்துவ உதவிகளை மேற் கொள்ள வேண்டும்.வகுப்பறைகளில் அவர்களை எவ்வளவு இனம் காண வேண்டும் என்பது பற்றிய தெளிவான விளக்கம் கூறப்பட்டது.
முன் பள்ளியில் குழந்தைகள் இருக்கும் போது அவர்களுக்கான பாதுகாப்பு எவ்வளவு வழங்கப் படவேண்டும்.அங்கு அவர்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் முதலில் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்.எவ்வாறான நோய்கள் அந்த வயது பிள்ளைக்கு ஏற்படும்.முதலில் ஆசிரியர்கள் செய்யும் உதவிகள் என்ன என்றும் விளக்கமளித்து வைத்தியர்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் காட்சிப் படுத்தலுக்காக வழங்கப்பட்டது
ஒவ்வொரு முன் பள்ளிகளிலும் துறை சார் வைத்திய நிபுணர்களின் தொலைபேசி இலக்கங்கள் காட்சிப் படுத்தி அவசர தேவைக்கு அவர்களின் உதவிகளை பெறுமாறும் கூறப் பட்டது.எதிர் காலத்தில் சிறந்த ஆளுமை மிக்க சுமூதாயத்தை கட்டி எழுப்புதல் மூலம் நற் பிரஜைகளை உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்தி கூறினர்.முதலுதவிப் பெட்டி ஒன்றில் வைக்கப் பட் வேண்டிய மருந்து வகைகள் அவற்றை கையாளும் விதம் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.ஆசிரியர்கள்- வைத்தியர்கள் நேரடி உரையாடல் மூலம் பல சந்தேகங்களை தீர்க்கும் முகமாக சிறப்பான கருத்தரங்காக இது அமைந்தது,  அதனைத்தொடர்ந்து  
கருத்தரங்கில் ஆடியசியம் (Audisum)  சம்பந்தமாக சிறுவர் நல மருத்துவ நிபுணர் பிரார்த்தனா விசேஷ உரையாற்றினார் .   அவரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும்  மிகவும் பயனுள்ளதாக இருந்தன
"ஆட்டிசம்" என்பது நரம்பியல் சார்ந்த  ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆனால் சிலர் இதை ஒரு நோய் என்று  எண்ணி விடுகிறார்கள் . பெற்றோர்கள் மத்தியில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது ,பல பெற்றோர்கள்  ஆட்டிசம் ஒரு குறைபாடு என்று புரிந்துகொள்வதற்குப் பதிலாக அதை ஒரு தீர்க்க முடியாத   நோயாகக் கருதி விடுகிறார்கள் .அதை மறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்
 பெற்றோர்கள்  ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை விழிப்புணர்வோடு அணுகுவது மிக  அவசியம்

குழந்தைகள் பேசாமல் இருக்கும்போதுதான் பெற்றோர்கள்  வைத்தியர்களை நாடுகிறார்கள் ,சந்தேகங்களை கேட்கிறார்கள். ஒரு குழந்தை இரண்டு வயதை அடையும் போது  ஏறக்குறைய பெற்றோர்களின்  எல்லா செயல்களுக்கும் பதில் சொல்வார்கள், செயலில் செய்துகாட்டுவார்கள்.
உணர்ச்சி வெளிப்பாடு இல்லாத குழந்தையாக ஒரு குழந்தை இருந்தால் முன் பள்ளி ஆசிரியர்கள்  மற்றும் பெற்றோர்  எளிதில்   கண்டறிந்து  கொள்ள முடியும்

முதலில் குழந்தைகள் மூன்று விதமான வளர்ச்சியை அடைய வேண்டும். மனவளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி ஆகிய மூன்றிலும் அவர்கள் வளர்ச்சியை எட்டவேண்டும்.
அதிகபட்சமாக, ஒரு குழந்தை இரண்டு வயதை எட்டும் நேரத்தில் ஆட்டிசம் உள்ளதா இல்லையா என்று தெளிவாக தெரிந்துகொள்ளலாம். ஆட்டிசம் இருக்கும் குழந்தைகள்  பெயரை சொல்லி அழைத்தால், அவர்களிடம் எந்த பதிலும் கிடைக்காது.
சமுதாய தொடர்பு, பேச்சு மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு என எளிமையாக புரிந்துகொள்ளலாம். இது போன்ற வளர்ச்சி படிநிலைகளில் ஒரு சில படிநிலைகளை ஒரு குழந்தை எட்டாமல் போகும்போது அந்த குழந்தை ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தையாக வளரும் வாய்ப்புகள் உள்ளன,'' என்கிறார் அவர். 

FREELANCER