அரசாங்கத்தினால் பொதுமக்களின் பொதுப் போக்குவரத்து சேவைகளை மிகவும் வினை திறனுடையதாக முன்னெடுக்கும் வகையில் தற்போது பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது
போக்குவரத்து அமைச்சரின் பணிப்புரையின் பெயரிலும் மாவட்ட மக்கள் விடுத்த நீண்ட கால சில கோரிக்கைகளின் அடிப்படையிலும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் இன்று மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்
புகையிரத நிலைய செயற்பாடுகளையும் தற்போதைய நிலைமைகள் தொடர்பான விடயங்களையும் புகையிரத நிலைய அதிபரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் நிகழ் நிலை ஆசன பதிவு செயற்பாடுகளையும் பார்வையிட்டார்
தினசரி கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு புறப்படும் இரவு புகையிரத சேவையானது இரவு 11 மணிக்கு புறப்படுவதனால் பொதுமக்கள் எதிர் நோக்கும் அசெளகரியங்கள் பற்றி புகையிரத நிலைய அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து விரைவில் இந்த விடயம் சம்பந்தமாக போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான நிரந்தர
தீர்வை பெற்றுத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரபு தெரிவித்தார்
வரதன்