ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் இல்லத்தில் இன்று காலை குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.