கடந்த 7 மாதங்களில் இடம் பெற்ற 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் , 52 பேர் உயிரிழந்துள்ள உயிரிழந்துள்ளனர் .

 


கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 62 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையது என தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 229 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.