மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் ஆண்
பெண் இருபாலாருக்குமான கயிறு இழுத்தல் போட்டி இடம் பெற்றது. பிரதேச
மட்டத்தில் தெரிவாகி இருந்த அணிகள் மாவட்ட மட்ட போட்டிக்கு
அழைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வகையில் முதலாம் இடத்தை மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய மட்டு
எம்பெயார் அணியினர் ஆண்கள் பிரிவையும், பெண்கள் பிரிவையும் பலத்த
போட்டிக்கு மத்தியில் தன்வசப்படுத்தினர்.
ஆண்கள் பிரிவில்
இரண்டாம் இடத்தினை ஆராயம்பதி சுடர் விளையாட்டு கழகமும், பெண்கள் பிரிவில்
இரண்டாம் இடத்தினை மண்முனை தென் எருவில் பற்றில் இருந்து வருகை தந்த
களுவாஞ்சி குடிமகளிர் அணியினரும் பெற்றுக் கொண்டதோடு தெரிவு செய்யப்பட்ட
அணிகள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் கிழக்கு மாகாண போட்டியில் பங்கு
பெற்ற உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர்
பி.ஜெயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மண்முனை வடக்கு
விளையாட்டு உத்தியோகஸ்தர் எஸ்.சிவகுமார், கோறளைப் பற்று விளையாட்டு
உத்தியோகஸ்த்தர் கே. சங்கீதா,மற்றும் குமரன்,ரவிச்சந்திரன் ஆகியோர்
நடுவர்களாக மத்தியஸ்தம் வகித்தனர்.
(ஆர்.நிரோசன்)