முத்தமிழ்
வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு
விழாவையொட்டிய இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன்
விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா இன்று 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை
காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இந்துசமய கலாசார
அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அநிருத்தனன் தலைமையில்
இடம்பெற்றது.
முன்னதாக துறவற நூற்றாண்டை யொட்டிய சுவாமி விபுலானந்த அடிகள் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
இந்
நிகழ்வுகளுக்கு திருமுன்னிலை அதிதியாக மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண
மிஷன் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தஜி மஹராஜ் கலந்துகொண்டு
ஆசியுரை வழங்கி னார்,
பிரதம
அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்களும்,
கௌரவ அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் ,சிறப்பு அதிதியாக
அம்பாறை மாவட்ட சகல பிரதேச செயலாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள்,
கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
300 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
( வி.ரி.சகாதேவராஜா)
.