300 க்கும் அதிகமான பைல்கள் இருப்பதாக கூறினார்கள்.ஆனால் எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை- நாமல் ராஜபக்‌ஷ

 

 


எமது வேட்பாளர் பட்டியலில் போலி கலாநிதிகள் இல்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் எமது வேட்பாளர் பட்டியலில் கலாநிதிகள் இல்லை.நாம் போலியாக கலாநிதி என பெயர் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டவில்லை.அவர்கள் பாராளுமன்றம் வந்த பின்னரே அவர்களுக்கு கலாநிதி பட்டமும் இல்லை பேராசிரியர் பட்டமும் இல்லை என்பது தெரியவந்தது.

எம்மை திருடர்கள் என்றார்கள்,கமிஷன் எடுத்த காசோலை இலக்கம் மற்றும் வங்கி கணக்குகள் பற்றி தெரியும் என்றார்கள்,300 க்கும் அதிகமான பைல்கள் இருப்பதாக கூறினார்கள்.ஆனால் எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை.பொய் நீடிக்காது பொய்யர்களின் ஆட்சி நீடிக்காது என அவர் கூறினார்.