மட்டக்களப்பில் வலது குறைந்தோருக்கான தேசிய பயிலுநர் விளையாட்டு விழா நிகழ்வானது மடடக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இந்துகல்லூரி மைதானத்தில் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள வலது குறைந்தோரின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்காட்டும் முகமாக இப்போட்டிகள் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் மேற்பார்வையில் மாவட்ட சமூக சேவை உத்தியோத்தர் திருமதி கோணேஸ்வரன் சந்திரகலா ஒருங்கிணைப்பில் நடை பெற்றது.
"விடா முயற்சியின் பெறுபேறு வெற்றி " எனும் தொணிப்பொருளில் வலது குறைந்தோருக்கான விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி நவருபரஞ்ஜினி முகுந்தன், கிரான் பிரதேச செயலாளர் எஸ் சித்திரவேல், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம், கிழக்கு மாகாண சமூக சேவை பணிப்பாளர் யூ. சிவராஜா, மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.















