அமைச்சுகள், மாகாண சபைகளில் காணப்படும் மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 7,456 என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

 


 பொது சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில் காணப்படுவதாக அரச தரப்பு அறிவித்துள்ளது.

இதன்படி,  சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில் 3,519 வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.