வரையறுக்கப்பட்ட சுகாதார திணைக்களத்தின் கூட்டுறவுச் சிக்கனக் கடனுதவிச் சங்கதின் ஏற்பாட்டின் “திரியதடரு பிரணாம” புலமைப்பரிசில்கள் பரிசளிப்பு வைபவம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் S.A. உமீர் தலைமையில் அட்டாளைச்சேனை சராஹ் பீச் ரிசோட்டில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை , கல்முனை பிராந்திய சகாதார பணிப்பாளர் Dr.சகீலா இஸ்ஸடீன், வைத்திய அதியட்சகர்களான Dr.A.L.F. ரஹ்மான், Dr. I.M. ஜவாஹிர், Dr. உபுல் கருணாரத்ன, N.P.R.F.சந்திரசேன மற்றும் சுகாதார ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.














