கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவகற்றல்,நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது .









 ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு

 

 

 

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபை, போதனா வைத்தியசாலை, இராணுவத்தினர், பொலிசார் இணைந்து 80 கிலோமீட்டர் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவகற்றல்,நடவடிக்கை டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது .

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக்,பொலித்தீன் கழிவகற்றல் நடவடிக்கைகள் சுமார் 80; கிலோமீட்டர் பரப்பளவில் இடம்பெற்றது .எகெட் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர சபை, போதனா வைத்தியசாலை, இலங்கை இராணுவம், பொலிஸ் திணைக்களம்,சமூக நல அமைப்புகள் இணைந்து பாரிய தூய்மைப்படுத்தல் நடவடிக்கையினை இன்று மேற்கொண்டன.

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் இடம் பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எந்திரி எம் சிவலிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ் முரளீஸ்வரன் மற்றும் சர்வ மதத்தலைவர்கள், சமூகநல அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்