ஸ்ரீ சித்திவிநாயகர், அன்னை பேச்சியம்மன் கடாட்சம், பகவான் ஸ்ரீ இராமகிருஸ்ண பரமஹம்சர் அருள் ஆசி, கல்லடி பிரதேச மக்களின் ஆதரவுடன் கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை ஆற்றிய ஆன்மீக- கல்விப்பணிகள்.



 சிவா - பிரபாபாரதி

 

அன்னை பேச்சித்தாயாரின் அருட்கடாட்சத்துடன் கல்லடி பிரதேசத்தில் சிவானந்தா வித்தியாலயம், இராமகிருஸ்ண மிஷன் தோற்றம் பெற பெரும் பங்களிப்பு நல்கி நினைவில் நிற்கும் பெரியார் கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு தினமாகும்.
சமயம் கல்வி சமூகப்பணிகளில் தன்னை அர்ப்பணித்து அன்பை பெற்ற அமரர்.K.O வேலுப்பிள்ளை அவர்கள் இறையடி சேர்ந்து இன்று 70 வருடங்கள் ஆகின்றது. இன்றைய நாளில் அவரையம் அவரது சேவைகளையம்  நினைவு  கூறுவது  நன்றியுணர்வு   உள்ளவர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும்.
 

ஆன்மீக பணிகள்
* 1917ம் ஆண்டு தந்தையார் கதிர்காமத்தம்பி உடையார் மறைவு
க்குப் பின் ஸ்ரீ சித்திவிநாயகர் ,   அன்னை  பேச்சியம்மன் ஆலய முகாமையாளர் பொறுப்பை ஏற்றார்.
விநாயகர் ஆலய இராஜ கோபுரம் பிராதன வாயிலுடன் காணப்படும் அர்த்த மண்டபம்,  தம்ப மண்டபம்  , வசந்த மண்டபம்,  யாக மண்டபம், சண்டேஸ்வரர் ஆலயம்,  வடபுறத்து மணித்தூண்  என்பவற்றை தனது சொந்த செலவில் அமைத்தார்.  இன்று அவை புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.


*இந்தியாவில் உள்ள கும்பகோணத்திலிருந்து ஆச்சாரிமார்களை வரவழைத்து அழகான கலையம்சம் பொருந்திய ஆக
விதிப்படி ஜம்பொன்னாலான  கொடிமரத்தை  அமைத்தார்.
ஆலயத்திற்கு தேவையான நடராஜர் சிலை, நவக்கிரகங்கள், பஞ்சலோக விக்கிரகங்கள் அத்தோடு சூரன் ஏனைய வாகனங்கள், தேர் திருவாசிகள் கொடி, குடைகள்  தீபாரலதிகள் இவரால் ஆலயத்திற்கு வழங்கப்பட்டது.
*நாகதம்பிரான் ஆலயத்தையும், 
"புஸ்பகர்ணி” என்ற தீர்த்த குளத்தையும் தனது சொந்த செலவில்  சொந்த காணியில் 1928இல்  அமைத்தார்.

*ஓலைக் குடிசையிலிருந்து 
அருள் பாலித்த பேச்சியம்மன் விக்கிரகத்தை  இந்தியாவிலிருந்து எடுத்து வந்து  மாம்பழக்குருக்கள் மூலம் பிரதிட்டை செய்து வைத்தார்.


28 வருடங்கள் ஸ்ரீ சித்திவிநாயகர்   
அன்னை பேச்சியம்மன் ஆலய முகாமையாளர் பதவியிலிருந்து சொந்த நிதியில் ஆலயத்தை நிர்வகித்து அபிவிருத்தி செய்து 1947 ம் ஆண்டு 5 குறிச்சிகளாக பிரித்து கல்லடி உப்போடை நொச்சிமுைைன மக்களின் கையில் நிர்வாகத்தை ஒப்படைத்தார்.( 1918-1946)


* மண்டூர் உற்சவத்தின் போது அடியார்களுக்கு அன்னதானம் வழங்க 1909 ம் ஆண்டு தனது தகப்பனாரால் கட்டப்பட்ட கல்லடி மடத்தை 1917ம் ஆண்டு பொறுப்பெடுத்து  28 வருடங்கள் அன்னதானம் வழங்கி அதன் பொறுப்பை பின் சந்ததியினருக்கு வழங்கினார். (1918-1946)
*கல்லடி பிரதேச மக்களை நேசித்து அம்மக்களை ஸ்ரீ இராமகிருஸ்ண பரமஹம்சரின் போதனைகளின் படி வழி நடத்தி ஆசி வழங்கிய முத்தமிழ் வித்தகர்   சுவாமி  விபுலானந்தருக்கு  பிரதேச  மக்களுடன்  இணைந்து சமாதி அமைப்பதற்கு முன் நின்று உழைத்தார்.

*கல்லடி உப்போடை பிரதேசத்தில் இராமகிருஸ்ண மிஷன்  
தோற்றம் பெற   பங்களிப்பை நல்கி உறுதுணையாக நின்றார்

கல்விப் பணிகள்
*தனது தந்தையார் கதிர்காமத்தம்பி உடையார், மாமனார் சபாபதிப்பிள்ளை உடையார்  கியோரால் ஸ்தாபிக்கப்பட்ட விவேகானந்தா மகளிர் கல்லூரியின் முகாமையாளர்  பொறுப்பை   தந்தையாரின் மறைவுக்கப் பின் 1917 இல் ஏற்று சேவை புரிந்தார்.
* மாசி 1924 
இல்    தற்போதைய விவோகானந்தா மகளிர் கல்லூரிக்கு கட்டிட வசதியொன்றை ஏற்படுத்தி கொடுத்தார்

* தை 1925 ஆங்கிலப்பாடசாலை ஒன்றை ஸ்தாபிக்கும் தனது எண்ணத்தை ஆலய பஞ்சாயத்து சபையாரிடம் தெரிவித்து இது விடயமாக சுவாமி விபுலானந்தரை சந்தித்து கல்லடி பிரதேசத்திற்கு அழைத்து வர வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தி சுவாமி விபுலானந்தரை சந்திக்கும் திட்டத்தையும் வெளிப்படுத்தி சுவாமியை சந்திக்க குழு ஒன்றையும் தெரிவு செய்தார்.

*ஆலய பஞ்சாயத்துசபை,    தற்போதைய விவேகானந்தா   கல்லூரி   நிர்வாக சபை,    தெரிவு செய்யப்பட்ட கல்லடி பிரதேச மக்கள் குழுவுக்கு தலைமை தாங்கி சுவாமியை சந்தித்து  கல்லடி பிரதேசத்திற்கு வருகை தருமாறு அழைப்பை விடுத்தார்.

*10.04.1925 கல்லடி பிரதேசத்திற்கு சுவாமி வருகை தருகிறார். இவரது தலைமையில் படகு துறையிலிருந்து பிரதேச மக்கள் மாபெரும் வரவேற்பளிக்கின்றனர்.     பேச்சிஅன்னை அரசாளும்  ஆலய முன்றலில்    வரவேற்பு கூட்டம் நடைபெற்றது.

 

*ஆங்கில வித்தியாலயம் ஆரம்பிக்க பட வேண்டிய அவசியம் பற்றி சுவாமியிடம் பிரஸ்தாபிக்கப்பட்டது, சகல வளங்களையும் தரும் பட்சத்தில் இப் பணியை தன்னால் கல்லடி பிரதேசத்தில் செய்ய முடியும் என்ற கருத்தை சுவாமி தெரிவித்தார், சகல வளங்களையம் பெற்றுத்தருவதாக   ஆலய தர்மா கர்த்தா    சுவாமி விபுலானந்தரிடம் வாக்குறுதி அளிக்கின்றார்.
*26.11.1925 இவரது சொந்த நிலத்தில் சிவானந்தா வித்தியாலய ஆரம்ப கட்டிடத்திற்கான அடிக்கற்கள் ஸ்ரீ சித்திவிநாயகர்,   அன்னை   பேச்சியம்மன் வழிபாட்டின் பின் ஆலய வளாகத்திலிருந்து எடுத்துச்சென்று சுவாமி விபுலானந்தரின் திருக்கரத்தால் அடிக்கல் நடவைத்தார்.

*25.04.1928   பேச்சி அம்மன்    ஆலைய வளாகத்தில் 2809  இலக்க சாசனம் மூலம் ஏற்கனவே உறுதியளித்த பின்வரும் வளங்களை   சுவாமியிடம்    ஒப்படைத்தார்.
தற்போதைய சிவானந்தா வித்தியாலயம் , ஆரம்ப இராமகிருஸ்ண மிஷன் வணக்க அறை கட்டிடங்கள் அமைந்த 1 ஏக்கர் 19 பேர்ச் காணி சிவானந்தா விளையாட்டு மைதானம்,  வித்தியாலய விடுதி அமைந்த 9
ஏக்கர் 138பேர்ச் காணி,    சிவபுரி சுவாமி விபுலானந்தர் மணிமண்டபம் விபுலானந்தர் சமாதி,பாலர் பாடசாலை அமைந்த 4 ஏக்கர் 65பேர்ச் காணி (இது K.O.V,நொத்தாரிசு இருவருக்கும் சொந்தமான பிரிபடா காணி).

1909 ம்ஆண்டு கதிர்காமத்தம்பி உடையார்,   சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்ட சைவப்பள்ளிக்கூட  (தற்போதைய விவேகானந்தா மகளிர் கல்லூரி)  கட்டிடங்களுடன் சேர்ந்த நிலம்,
சைவப்பள்ளிக்கூட பராமரிப்புக்காக கதிர்காமத்தம்பி உடையார் மற்றும் சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரால்  27.04.1912 அன்று KCVK Udaiyar& Sons கம்பனி பெயரில் வைப்பிலிட்டிருந்த  5000 ரூபாய்களையும்  தற்போது சிவானந்தா வித்தியாலயம் அமைந்துள்ள நிலத்தில் மேலதிக வசதிகளை ஏற்படுத்துவதற்கு வழங்கினார்.
* சிவானந்தா வித்தியாலயம் என்ற இந்து ஆங்கிலப்பாடசாலை ஆரம்பிப்பதற்கு சுவாமியுடன் பக்கபலமாக இருந்தார். சுவாமியும் சிறந்த வழிப்படுத்தலையும் இவருக்
கு நல்கினார்.
· 1932 சித்திரை மாதம் இராமகிருஸ்ண மிஷன் பூரணமாக பொறுப்பெடுக்கும் வரை சிவானந்தா வித்தியாலயம், விவேகானந்தா மகளிர் கல்லூரி
ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு  பக்க பலமாக இருந்தார்.
*ஆலயத்தையும்     ,   இராமகிருஸ்ண மிஷனையும் தனது இரு கண்களாக நேசித்து இராமகிருஸ்ண மிஷன் துறவிகள் நமது பிரதேசத்தில் கால் பதித்து  புண்ணிய பிரதேசமாக மிளிர சமூகத்தின் இணைப்பு பாலமாக இருந்தார்.
26.11.1954 அன்று சிவானந்தா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நாட்டிய திகதியிலும் மாதத்திலும் இறைவனடி சேர்ந்தார்.