நீர்கொழும்பு முன்னக்கரை கலப்பு பகுதியில் தோணி- படகு மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இந்த விபத்து நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 பேர் நீரில் மூழ்கிய நிலையில் அவர்களில் 5 பேர் உயிர் தப்பியுள்ளனர். 50 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிர் தப்பிய 5 பேரில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மூவர் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்





