மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலய ஒளிவிழா நிகழ்வு -2024

 

   




 

 


 


 


 


 



FREELANCER

 

 

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாபலவருடங்கள் இயங்காமல் இருந்த மட்டக்களப்பு   சிங்கள மகா வித்தியாலயம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி மீளவும் ஆரம்பிக்கப்பட்டது .

மட்டக்களப்பு   சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழி பாடசாலையாக திகழ்வது குறிப்பிட்ட வேண்டிய ஒரு அம்சமாகும் .

அந்த வகையில் 2024ஆண்டு இரண்டாவது முறையாகவும் ஒளிவிழா நிகழ்வு 22. 11 2024 ஆம் ஆண்டு காலை 10 மணி அளவில் அதிபர் திருமதி ரா கேதீஸ்வரன் மற்றும் திருமதி எச் பி வசந்தகுமார், திருமதி தாரணி பிருந்தாவன், பி பாலகிருஷ்ணன் மற்றும் செயலாளர் என் தர்ஷிகா தலைமையில் சக மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்பில் நடைபெற்றது .

தமிழ் மொழியில் கல்வி கற்கும் எட்டு மாணவர்களும் , சிங்கள மொழியில் கல்வி கற்கும் ஐந்து மாணவர்களுமாக மொத்தமாக 13 மாணவர்களில் கல்வி கற்றுவருகிறார்கள்.

மட்டு மாவட்ட சிங்கள மகா வித்தியாலயத்தில் மும்மதத்தையும் சேர்ந்த மாணவர்கள் கற்று வருவது சிறப்பம்சமாகும் .
இவர்களில் கல்வி கற்கும் ஐந்து கிறிஸ்தவ மாணவர்களுக்காக அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் சேர்ந்து ஒளிவிழா நிகழ்வை சிறப்புடன் நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது ..

2024 ஒளிவிழாவானத்து பழைய மாணவசமுதாயத்தின் , மற்றும் வெளி நபர்களின் எந்தவித உதவியோ பங்களிப்போ இல்லாமல் ஆசிரியர்கள் , மற்றும் பெற்றோர்களின் முழுப்பங்களிப்பில் நடாத்தப்பட்டது .

எதிர்வரும்வரும் காலங்களில் பாடசாலை சம்பந்தப்பட்ட விழாக்களில்(விளையாட்டுப்போட்டி , பரிசளிப்புவிழா , ஒளிவிழா ) , சமூக செற்பாட்டாளர்கள் , நலம் விரும்பிகள் , பழைய மாணவ சமூகத்தினர் பாடசாலை நிர்வாகத்தோடு இணைந்து எமது மாணவ சமூகத்தின் எதிகாலத்துக்காகவும் , பாடசாலையின் முன்னேற்றத்துக்காகவும் இயன்ற பங்களிப்பை செய்ய முன்வருமாறு பெற்றோர் சமூகம் கேட்டுக்கொள்கின்றனர்