செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்

 


லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனானின் தெற்கு ஹஸ்பையா பகுதியிலுள்ள தங்குமிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.