இவ்வருடக் கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கடினபந்து கிரிக்கெட் போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை அணி சம்பியன்.

 

 











(கல்லடி செய்தியாளர்)



 

 

2024 ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண கடின பந்து கிரிக்கெட் போட்டியில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவாநந்த   வித்தியாலய மாணவர்கள்  மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாடசாலைக்கு பெருமை சேர்த்த சிவாநந்த  
வீரர்கள்,பெற்றோர்கள், பொறுப்பான ஆசிரியர்கள், அதிபர், பிரதி அதிபர்கள், பாடசாலைக் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் டிஷாந்த் ஆகியோருக்கு  பாடசாலை சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.