இலங்கையில் 9-ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 15ம் திகதி அன்று நிறைவடைந்ததையடுத்து, இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இதுவரை நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்களில் அதிகளவிலான சிறுபான்மை வேட்பாளர்கள் போட்டியிடும் முதலாவது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, இம்முறை தேர்தலில் மூன்று தமிழர்களும், இரண்டு இஸ்லாமியர்களும் போட்டியிடுகின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் பா.அரியநேத்திரன் போட்டியிடுகின்றார்.
அத்துடன், இந்திய வம்வாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் போட்டியிடுகின்றார்.
அத்துடன், அருணலு மக்கள் முன்னணி சார்பில் கே.ஆர்.கிரிஷான் போட்டியிடுகின்றார்.
மொஹமட் இல்லியாஸ், மற்றும் அபுபக்கர் மொஹமட் இன்பாஸ் ஆகியோர் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிடுகின்றனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவரைத் தேர்வு செய்வதற்காக இதுவரை நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்களில் அதிகளவிலான சிறுபான்மை வேட்பாளர்கள் போட்டியிடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.