எதிர்க்கட்சித் தலைவர் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட நிதி மூலங்களை பெறும் திட்டங்களை கூற முடியுமா என சவால் விடுகிறேன் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் சகலரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -அமைச்சர் பந்துல குணவர்த்தன
எதிர்க்கட்சித் தலைவர் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட நிதி மூலங்களை பெறும் திட்டங்களை கூற முடியுமா என நான் கிழக்கு மாகாணத்தில் இருந்து சவால் விடுகிறேன்.
ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க வெளிநாட்டு கடனுதவி பற்றிய திட்டங்கள் எதிர்கால செயற்பாடுகள் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் பற்றி எந்த அரசாங்கங்கள் வந்தாலும் இந்தத் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் விட்டால் நாடு மீண்டும் பழையபடி பொருளாதார நெருக்கடிகளை முகம் கொடுக்க வேண்டி வரும்
எனவே வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியின் சின்னத்துக்கு வாக்களிக்காவிட்டால் சகலரும் இந்த நிலைமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்
இலங்கை வரலாற்றிலேயே அரச அதிகாரிகளுக்கு அதிக அளவிலான சம்பள அதிகரிப்பு இன்னும் முன்னெடுக்கப்படவில்லை இருப்பினும்
எமது ஜனாதிபதி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சகல அரச ஊழியர்களுக்கும் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய பணிகள் முன்னெடுத்து வருவதாகவும் எனவே சகல அரச அதிகாரிகளும் சிந்தித்து இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் இவற்றையெல்லாம் பாழாக்கி விடுவார் என
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு கருத்து தெரிவித்தார்