சர்வதேச நாணய நிதியத்துடன் நேரடி கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுக்கும் சவாலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று தெரிவித்தார்.
எந்த நேரத்திலும் சந்திப்பிற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என கலாநிதி டி சில்வா தெரிவித்தார்.
SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதே நிலைப்பாட்டையே முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, SJB தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பகிரங்க கலந்துரையாடலுக்கு சவால் விடுத்தார். இது சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.