அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் நாளை (26) ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மழையுடனான காலநிலை காரணமாகப் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளதுடன் விடுமுறை முடிந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிப்பது அவசியம் என சுகாதாரப்பிரிவின் பெற்றோர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.