FREELANCER
புத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாச்சார அலுவல்கள்
திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன
ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட்ட இளம்
எழுத்தாளர்களுக்கான இலக்கிய அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு
பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது. .
மட்டக்களப்பு மாவட்ட
செயலாளர் மற்றும் உதவி மாவட்ட செயலாளரின் ஆலோசனையின் பேரில்
,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இலக்கிய துறையில் எழுத்தாளர்களின்
பங்குபற்றுதல்களையும் , தேசிய ரீதியில் அவர்களின் எழுத்தாற்றல்களையும் ,
ஊக்குவிப்பதற்குமான செயலமர்வு இலங்கை கலைக்கழகத்தின் அனுசரணையுடன் இடம்
பெற்றது .
பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் , பேராசிரியருமான ஸ்ரீ பிரசாந்தன் வளவாளராக கலந்து கொண்டார். .
இலங்கை
கலைக்கழக உறுப்பினரும் , கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அரச இலக்கிய
ஆலோசனை குழு உப செயலாளர் இணேஷ் , மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்
MAC.ஜெயினாலாப்தீன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் 14-.
பிரதேச செயலகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளம் எழுத்தாளர்கள்
செயலமவில் பங்கு பற்றி இருந்தார்கள் .