உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்வு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 
 

 




 





 





(கல்லடி செய்தியாளர்)

 

 



மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட செயலகம்,மண்முனை வடக்குப்  பிரதேச செயலகம் மற்றும் மாணவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை  (25) இடம்பெற்றது.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு விசேட தொழில் வழிகாட்டல் திட்டமானது கல்வி அமைச்சினால் நாடுபூராகவும் 30000 மாணவ, மாணவிகளுக்கு 299 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 பிரதேச செயலக பிரிவுகளில் 3386 மாணவர்களுக்காக இந் நிகழ்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில்  1227 மாணவர்கள் இந் நிகழ்ச்சி திட்டத்தினைப் பூரணப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இவர்களுக்கான சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஜீ.பிரணவன், மண்முனை வடக்குப் உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ் ரகுராஜா, மாவட்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. சிவகுமார், அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.