ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இரவு விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கமாறு பஸில் ராஜபக்ஷவிடம் ரணில் கோரியுள்ளார். எனினும், பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை பஸில் உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
இருவருக்கும் இடையில் நேற்று இரவும் சந்திப்பொன்று நடைபெற்றது. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கப் பெறுமா அல்லது இல்லையா என்பது இன்றைய கூட்டத்தின் பின்னர் தெரியவரும் என அறியமுடிகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட உள்ளதால் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஆளுங்கட்சியை ஒருங்கிணைக்கும் தீவிர முயற்சியில் ரணில் விக்ரமசிங்க களமிறங்கியுள்ளதாக தெரியவருகிறது.