போதைப்பொருள் பாவனை சம்பந்தமாகப் பிரதேச ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது .

















 

 

(கல்லடி செய்தியாளர் &  செய்தியாசிரியர் )

 

 


போதைப்பொருளிருந்து இன்றைய சமுகத்தினைப் பாதுகாப்பது தொடர்பில் மட்டக்களப்பு  மாவட்ட ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (25) மண்முனை வடக்குப் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலின் கீழ் போதைப்பொருள் முற்தடுப்பு சமூதாய உத்தியோகத்தர் ப.தினேஷின் ஏற்பாட்டில்
மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்ளும் நிகழ்வாக இது அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 20 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

கிராம, பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை   தடுப்பதற்குத் தேவையான விழிப்புணர்வுகளை ஊடகவியலாளர்கள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பாக இதன்போது  எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய  சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட அதிகாரி ஏ.சி.றஹீம் கலந்து கொண்டு போதைப்பொருள் பாவனை தொடர்பாக பல்வேறு ஆதாரங்களூடாக தெளிவூட்டலை மேற்கொண்டார்.