மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தின் ஆடி அமாவாசை மஹோற்சவம் -2024





 







FREELANCER


கிழக்கிலங்கையில் மூர்த்தி,தலம்,தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று இராமாயாண இதிகாச வரலாற்றுச் சிறப்புடைய மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தின் ஆடி அமாவாசை மஹோற்சவம்  2024.07.26.நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00. மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது .

இன்று பிற்பகல்   4.மணிக்கு மட்டக்களப்பு ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிசீலை மாமாங்கேஸ்வரர்ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டது 

. ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் பத்து தினங்கள் நடை பெறும் .
ஒன்பதாம் நாள் திருவிழா2024.08.03 அன்று காலை இரதோற்ஸவம் நடைபெறும் ,பத்தாம் நாள் திருவிழா 2024.08.04 அன்று ஞாயிற்றுக்கிழமை பிதிர்க்கடன் 

தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்  ஆலய தீர்த்த குளத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .