களுவாஞ்சிக்குடி சக்தி மகளிர் இல்ல உயர்கல்வி கல்வி நிறுவன மாணவிகளுக்கு "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for Success-S3) சுய ஊக்குவிப்புப் பயிற்சியை Dr.K.T.பிரஷாந்தன் அவர்கள் வழங்கினார்.












மட்டக்களப்பு  மாவட்டம்    களுவாஞ்சிக்குடி சக்தி மகளிர் இல்லம் தரம் 3 முதல்  உயர்கல்வி கல்வி நிறுவன மாணவிகளுக்கு  25/6/24  பி..ப.3.30 - பி.ப 6.30 வரை  "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for Success-S3) சுய ஊக்குவிப்புப் பயிற்சியை Dr.K.T.பிரஷாந்தன் அவர்கள் பங்கேற்பு முறையில் வழங்கினார்.

வெள்ளி விழா கொண்டாடும் சக்தி மகளிர் இல்லத்துக்கு  KTP Consultancy & Training நிறுவனத்தின்  621வது தொழின்முறைப்  பயிற்சியான இதனை முழு இலவசமாக தனிநபர் சமூகப் பொறுப்புணர்வு (Personal Social Responsibility-PSR) நடவடிக்கையாக வழங்கினார்.

சக்தி மகளிர் இல்ல முகாமையாளர்  செல்வி.சிவகுணம் ஜீவமணி, நன்னடத்தை அலுவலக பொறுப்பதிகாரி திரு.எம்.என்.எம்.றபாஸ் ,  நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.வி.கோவிந்தராஜன், இல்லப் பணியாளர்கள் திருமதி.கி.பக்சலாதேவி மற்றும் செல்வி.சூ.டிலோஜினி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பல பாடசாலைகள் ,சமூக அமைப்புக்கள் KTPஇன் பயிற்சிகளை நாடளாவிய ரீதியில் வேண்டினாலும் அவற்றைச் செய்வதற்கான நிதி அனுசரணைகள் பெரிதும் அவசரமாய் அவசியமாய் தேவை. நல்லுள்ளங்கள் நிதி அனுசரணைத் தொடர்புகளுக்கு +94715650258