வரதன்
தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்தால் ரணில் விக்கிரமசிங்க வயசானாலும் மீண்டும் ஒருமுறை வர வேண்டும் அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சனையும் கிடையாது நான் அவருக்கு எதிராகத்தான் வாக்கு போட வேண்டியவன் ஏனென்றால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அவர் என்னை சிறையில் அடைத்ததில் பிரதான பங்கு வகிப்பவர் இருப்பினும் தனிப்பட்ட வெறுப்பு விருப்புக்கு அப்பால் அரசியல் செய்ய முடியாது
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் ,அபிவிருத்தியின் மூலம் உற்பத்தி துறையின் சக்தி மிக்கவர்களாக நாம் மாற வேண்டும்.
யார் இந்த நாட்டை முன்னுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழர்களின் பிரச்சனையை ஓரளவேனும் விளங்கிக் கொண்டவர்கள் தமிழர்களின் பிரச்சனையை மேலும் இழுத்துக் கொண்டு செல்ல முடியாது
கிழக்கு மாகாணம் வறுமையுடைய மாகாணம் என்பதை அவர் உணர்ந்து உள்ளார் அதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நாம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். .