மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று காலை காந்தி பூங்கா வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது















(கல்லடி செய்தியாளர் & கிறிஸ்டி )


மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள், கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா??, பிள்ளைகளை தினம் தேடிக் கொண்டே நீதி இன்றியே இறந்து கொண்டிருக்கின்றோம், நாங்கள் கேட்பது இழப்பீடையோ மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரணையே, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 70 க்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதுடன் அரை மணி நேரம் இவ்வார்ப்பாட்டம் இடம் பெற்றது.