மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய மாநாடு!



















(கல்லடி செய்தியாளர் & செய்தியாசிரியர் )



இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேசிய மாநாடு மட்டக்களப்பு வில்லியம் ஓல்ற் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சு.அ.டெஸ்மன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,சிறப்பு அதிதிகளாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா,இலங்கை ஆசிரியர் சேவை பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க,இலங்கை ஆசிரியர் சேவை சங்க தேசிய அமைப்பாளர் சுந்தரவிங்கம் பிரதீப்,இலங்கை ஆசிரியர் சேவை சங்க உபதலைவர் அபூபக்கர் ஆதம்பாவா,இலங்கை ஆசிரியர் சேவை சங்க ஊடகப் பொறுப்பாளர் எஸ்.பி.பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.