மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னணி பதிப்பகங்களின் ஒன்றான காந்தள் பதிப்பகத்தினுள் நேற்று நள்ளிரவு சாரதியின் கவனமின்மையால் பிக்கப் ரக வாகனம் ஒன்று வேலிகளையம் மரங்களையும் உடைத்துக்கொண்டு உள் நுழைந்துள்ளது , பதிப்பகத்தின் இருப்பினாலான வாசல் கதவும் சேதமடைந்துள்ளதோடு வாகனத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது , நள்ளிரவு நேரமாகையால் சாரதி தூக்க கலக்கத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் இவ் விபத்து இடம் பெற்றிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது . சாதிக்கு காயம் எதுவும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை
இன்றுகாலை விபத்து சம்பந்தமாக சாரதியினால் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன