குழந்தைகளின் கல்வியை அடகு வைத்து ஜேவிபி கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து அரசியல் செய்வதை இடமளிக்க முடியாது - அமைச்சர் மனுஷ நாணயக்கார

 







 

வரதன் 

 

ஜனாதிபதி  நாட்டை நேசிக்கும்  தலைவர்  ஆசிரியர் சேவையினை புனிதமாக மதிப்பவர் குழந்தைகளின் கல்வியை அடகு வைத்து ஜேவிபி கட்சியினர்  இவ் வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து அரசியல் செய்வதை இடமளிக்க முடியாது  -அமைச்சர் மனுஷ நாணயக்கார
நாட்டின் ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகளுக்குள் இந்த ஆசிரியர் சேவையினையும் கொண்டு வருவதாக தெரிவித்திருப்பது ஒரு கவலையான விடயம் ஏனென்றால் நாட்டில் உள்ள குழந்தைகளின் கல்வியை அடகு வைத்து இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது தங்களுக்கு வேண்டியதை அடைய  முயல்வது மிகவும் ஒரு கவலையான விடயமாகும்

 ஜனாதிபதி மக்களினுடைய தேவையை அறிந்து முடிவுகளை எடுக்கும் ஒரு தலைவர்

 நாட்டில் பொருளாதார பாதிக்கப்பட்டிருந்தபோது மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் முடக்கப்பட்டு இருந்தபோது வீடுகள் தீவைக்கப்பட்டு இருந்தபோது இக்கட்டான காலகட்டத்தில் நாட்டை பாரம் எடுத்தவர் தான் எமது ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க

 இவ்வாறான காலகட்டங்களில் மாணவர் களின் கல்வியை  பணயமாக வைத்து அரசியல் செய்வதற்கிடம் அளிக்க முடியாது
இதனாலேயே தற்போது இந்த சேவையினை அத்தியாவசிய சேவையாக முன்னெடுக்க வேண்டியுள்ளது அரசாங்கத்திற்கு ஒவ்வொருவரின் தாளத்திற்கு ஏற்ப ஆட முடியாது

நமக்கு மக்களின் கஷ்டங்கள் நன்கு புரியும் இருப்பினும் ஆசிரியர்களுக்கு அண்மையில் தான் சம்பளம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ள போதிலும் எனைய நிலையில் உள்ள அரசாங்க  ஊழியர்களையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது
இவ்வாறாக உள்ள போது ஒரு தரப்பினர் மட்டும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சந்தர்ப்பம் பார்த்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நாட்டை நேசிக்கும்  தலைவர்  ஆசிரியர் சேவையினை புனிதமாக மதிப்பவர் இவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகையை தாக்க உமக்கு எதுவித தேவையும் இல்லை. ஜேவிபி கட்சியினர் இவ்வாறான ஆசிரியர்களை வைத்து அரசியல் செய்வதை இடமளிக்க முடியாது


அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட ஊட சந்திப்பில் ஆசிரியர் சேவையினை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு சம்பந்தமாக இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமாக முறைப்பாட்டை அமைச்சரிடம்.முன் வைத்தது உள்ளேன் விரைவில் அதிகரிக்க ப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்க பெற வேண்டும்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர் மனுஷ நாணயக்காரருடன் ராஜாங்க அமைச்சர் சிவனேச துரை சந்திரகாந்தன் இணைந்து.  பல அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுக்க உள்ளத்துடன். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள  அமைச்சர் மனுஷ நாணயக்காரருடன்  தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமாக முறைப்பாட்டை அமைச்சரிடம்.முன் வைத்தது உள்ளேன்
  கடந்த   கேசட் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நீதிமன்றத்தில் தடை உத்தரவினை பெற முடியவில்லை இதுவரையிலும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என அரசாங்கத்தின் கெசட் அறிவித்தலை அமல்படுத்தப்படவில்லை என்பதோடு இது சம்பந்தமான முறைப்பாட்டை செய்துள்ளேன்
 விரைவில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்க பெற வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் இன்று மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக இவ்வாறு கருத்தை தெரிவித்தார்.