மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராமஅபிவிருத்தி சங்க காணியில் மதில் அமைப்பதற்கு கௌரவ இரா சாணக்கியன் ( பா . உ ) அவர்களால் அடிக்கல் நட்டுவைக்கப்பட்டது

 

 






 

















 

 




 



















FREELANCER


மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராமஅபிவிருத்தி சங்கத்துக்குரிய காணியில்  மதில் அமைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்   கௌரவ இரா சாணக்கியன்  அவர்களால்  நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டிருந்தது , அந்த வகையில்  2024 06 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல்  5. 30 மணியளவில் அடிக்கல் நாட்டும்  நிகழ்வு இடம்பெற்றது அடிக்கல்லினை கௌரவ இரா சாணக்கியன்  ( பா . உ ) அவர்கள் நட்டு  வைத்தார்.

இந்நிகழ்வில்  அவரது செயலாளர் மதி மேனன் ,ஒருங்கிணைப்பு செயலாளர் தினேஷ் குமார் ஆறாம் வட்டாரத் தலைவர் பிரதீப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர், மேலும் ஜெயந்திபுர  கிராம உத்தியோகத்தர், பொருளாதார  அபிவிருத்தி  உத்தியோகத்தர்  , சமுர்த்தி உத்தியோகத்தர் , பிரதேச போலீஸ் உத்தியோகத்தர்   ஆகியோரும்  கலந்து கொண்டார்கள்.

 ஜெயந்திபுரம் கிராமஅபிவிருத்தி  சங்கத்தலைவர் தலைவர் திரு முகுந்தன் அவர்கள் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது  . கிராமஅபிவிருத்தி  சங்க உறுப்பினர்கள்,  மாதர் கிராமஅபிவிருத்தி  சங்க உறுப்பினர்கள்,   முழுமதி சகவாழ்வு  சங்க உறுப்பினர்கள்   ஜெயந்திபுரம் சிரேஷ்ட  பிரஜைகள்   சங்க உறுப்பினர்கள்,  முழுமதி விளையாட்டுகழக  உறுப்பினர்கள்,  முழுமதி  இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு  ஸ்ரீ குமாரத்தன்  ஆலய தலைவர் , உபதலைவர் , பொருளாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்