வரதன்
ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகவை சுயபரிசோதனை செய்ய சொல்லுங்கள் . அவர்கள்தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் பின்பு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள் மக்களை கொல்வதற்கு நான் கொடுக்கவில்லை வேறு ஒருவர் தலைவராக இருந்தபோது இச்சம்பவம் இடம் பெற்றது
மட்டக்களப்புக்கு வந்தால் பொறுப்புடன் கதைக்கப் பழகச் சொல்லுங்கள் அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் அதனை தேடிப் பார்க்கட்டும். அவர் மக்களை நான் அச்சுறுத்துவதாகச் சொன்னால் மட்டக்களப்பில் அதிக வாக்குகளை பெற்றவர் நான்.
ஜனநாயகத்தைப் பற்றி கதைப்பவர்கள் பொறுப்பாக யோசித்து கதைக்க வேண்டும் நாட்டை தீக்குழிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை வன்முறைக்கு தூண்டிய ஒரு கட்சி நாட்டை அழிக்க செய்த ஒரு கட்சி எமது மண்ணில் இவ்வாறு கதைப்பது வேதனைக்குரிய விடயம் அவர்கள்தான் ஒரு பிரபல்யமான ஆயுதக் குழு எமது கட்சிக்கு ஆரம்பத்தில் ஆயுதம் வழங்கியவர்கள் அவர்களே மீண்டும் எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள் , அவர்களே இவ்வாறான ஆயுதங்களை தேடிப் பார்க்குமாறு நான் அவரிடம் வேண்டுகோள் விடுகிறேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சர் மான சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்..
நேற்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜேவிபி கட்சியில் தலைவரின் கருத்துக்கு பதில் வழங்கும் பொருட்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.