(கல்லடி செய்தியாளர & செய்தியாசிரியர் )
மட்டக்களப்புக்கு பல நன்மைகளை வழங்கும் ஜயகமு ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்ட. அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (28) மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார,கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டீனா முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய முதல் நாள் நாளில் , புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கௌரவவிக்கும் "ஹரசர திட்டம்" நடைபெற உள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள், பாடசாலை உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் விநியோகம் செய்யப்படும், பிரதேச செயலாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் ஊடாக தொழில் பயிற்சிக்கான நிதியை ஜனாதிபதி நிதியம் வழங்கின்றமை குறித்தும் தெளிவூட்டப்பட்டது.