மட்டக்களப்ப்பு வரவேற்பு பெயர்ப் பலகை (WEL COME TO BATTICALOA) றோட்டரி கழகத்தினரால் திறந்து வைப்பு.


 








FREELANCER

 
மட்டக்களப்பு நகர் பகுதியை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு திருக்கோணமலை பிரதான வீதி, சத்துருகொண்டான் பிரதேசத்தில் மட்டக்களப்பு றோட்டரி கழகத்தினர் சுமார் 3.0 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "WEL COME  TO BATTICALOA " எனும் பெயர்ப் பலகையினை இன்று (24) காலை 10.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக றோட்டரி கழகத்தினரால் திறந்து வைக்கப்பட்டது.
 நீண்ட காலமாக  மட்டக்களப்பு  நகரை அடையாளப்படுத்த பெயர்ப்பலகை இல்லாமல் இருந்தது , இதனை கருத்தில் கொண்டு றோட்டரி கழகத்தினர் இதனை அமைத்தது குறிப்பிடத்தக்கது .

 மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் தலைவர் எஸ். செல்வராசா  அவர்களின் ஒழுங்கு படுத்தலின் கீழ்  இப் பெயர் பலகையின் நிர்மாண  பணிகள் முன்னெடுக்கப்பட்டு அவர் தலைமையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் செயலாளர்  வைத்தியர்     இ. கருணாகரன் உள்ளிட்ட றோட்டரி கழகத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்