(கல்லடி செய்தியாளர்)
முறக்கொட்டான்சேனை வுளுஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் முறக்கொட்டான்சேனை வுளுஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ப.நிஸ்யந்தன் தலைமையில் முறக்கொட்டான்சேனை வுளுஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் சனிக்கிழமை (25) இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வுளுஸ்டார் விளையாட்டு கழகத்தின் மறைந்த முன்னாள் தலைவர் த. ஜெயகரன் ஞாபகார்த்த கடினபந்து சுற்றுப் போட்டிகள் வருடா வருடம் இடம் பெற்று வருகின்றது.
10 ஒவர்களைக் கொண்ட கடினபத்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டு தமது திறமைகளை பரீட்சிக்கவுள்ளனர்.
மாவட்டத்தில் கடினபந்து கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிக்காட்டும் ஒரு களமாக இப் போட்டிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே. சித்திரவேல்,மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், முறக்கொட்டான்சேனை இராமகிருஸ்ணன் பாடசாலை அதிபர் ம. தவநேஸ்வரன், கிராம சேவை உத்தியோகத்தர், கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.














