நாடு முழுவதும் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வேளையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் நடைபெற்ற பல வெசாக் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கங்காராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, அங்கு பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார்.
இதேவேளை, ஷங்கிரிலா பசுமை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட வெசாக் அன்னதானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும், பேலியகொட சமூக அபிவிருத்தி அறக்கட்டளை, பேலியகொட நகர சபை மற்றும் வர்த்தக சமூகம் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்த வெசாக் வலயத்தை நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.
இதேவேளை, வெசாக் பண்டிகையை முன்னிட்டு மருதானை - சுதுவெல்ல ஐக்கிய பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் வலயமும் கண்கவர் வெசாக் தோரணமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று முன்தினம் பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.





