முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானியாவுக்கு இடம்பெயரத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை இன்று (15) மறுத்துள்ளார்.
“டயானா தனது தாய் நாட்டிற்குத் திரும்பப் போகிறார்” என்ற தலைப்பில் வெளியான செய்திகளுக்கு மறுப்பு வெளியிட்ட அவர், “இது எனது தாய்நாடு” என்று கூறியுள்ளார்.





