இறால் வளர்ப்பு சம்பந்தமாக அபிவிருத்தி திட்டபணிகள் முன்னெடுக்கப்படும் போது அப்பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பு இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் - கிழக்கு மாகாண ஆளுநர்





வரதன்

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்
  வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட உள்ள இறால் வளர்ப்பு செயல்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை முன்னிட்டு  மாவட்ட அரசாங்க அதிபர் ஏற்பாட்டில்  விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது .
அங்கு உரையாற்றிய   -கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்வாறான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்போது அப்பகுதி  மக்களுக்கு எவ்வித பாதிப்பு இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும்  இப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் உடன் சேர்ந்து மக்களின் வளர்ச்சிக்கான அபிவிருத்தி பணிகள் செய்யப்பட  வேண்டும்   எனவும் குறிப்பிட்டார்
இந்த விசேட கலந்துரையாடலில் கடற் தொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்

வாகரைப் பிரதேசத்தில் அண்மையில் ராஜாங்க அமைச்சர் ஒருவரின் தலைமையில்  இந்த இறால் வளர்ப்பு திட்டம் சம்பந்தமாக மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதன் பின்னணியில் இந்த விசேட கலந்துரையாடல் நேற்று மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிட த்தக்கது.

 இந்த விசேட சந்திப்பின் போது ஊடகவியலாளர் களுக்கு இங்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது,
இருப்பினும் விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு இங்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.