வடமேல் மாகாண ஆளுநர் கௌரவ நசீர் அஹமட் அவர்கள் ஆசி பெற்றுக்கொண்டார்.

 








 

 நேற்று 13ம் திகதி  வடமேல் மாகாண ஆளுநர் கௌரவ நசீர் அஹமட் அவர்கள் மல்வத்தே மகாவிஹார அனுநாயக்க அதிமேன்மை தகு விக்ரமராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழக வேந்தர் நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த அதிமேதகு தேரர் அவர்கள் உங்கள் சிந்தனை போக்கின்படி தேசிய ஒருமைப்பாட்டிற்கு உங்களால் சிறந்த பங்களிப்பை ஆற்ற முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.

கௌரவ ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது வடமேல் மாகாணத்தில் தற்பொழுது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை வழங்குவதன் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பாடசாலைகளிலும் பிரிவினாக்களிலும் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான துரித நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், வடமேல் மாகாணத்தின் சுற்றுலா வர்த்தகம் நூற்றுக்கு இரண்டு வீதமாக உள்ளதாகவும் அதனை மேம்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு விசேட வேலைத்திட்டமாகும். எனவும் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியின் ஊடாக பிரதேசத்தின் சுற்றுலா வர்த்தகத்தை முன்னேற்றி வடமேல் மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.