இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு உயர் நீதிமன்றத்தால் சற்றுமுன்னர் வழங்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற ஆசனத்தின் சட்டபூர்வமான
தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் ரிட் மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு
நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்
மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
அதனடிப்படையில், டயானா கமகேவின் எம்.பி பதவியை இரத்துச் செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.





