மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களில் வெசாக் தின சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

 

 






வரதன்

வெசாக்  தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண போலீஸ்மா அதிபரின் வழிநடத்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல போலீஸ் நிலையங்களிலும்   வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
.
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டதன் பின்பு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல போலீஸ் நிலையங்க ளிலும்   வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்று வருகின்றன. பொது மக்களும் மிகவும் உற்சாகமாக வெசாக் தின நிகழ்வுகளை பார்வையிட வருகை தந்திருந்தனர்

இதேவேளை  மட்டக்களப்பு தலைமையக போலீஸ் நிலையத்திலும் வேசாக் கூடுகள்  காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன். இத்தினத்தை முன்னிட்டு  வேசாக் பக்தி ஆன்மிக கீதங்கள் இடம் பெற்றதுடன் இதனை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக விசேட தாக சாந்தி ஒழுங்குகளும் மேற்கொள்ளப் பட்டிருந்தன

 இவ் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட சகல போலீஸ் நிலையங்களிலும் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த விசேட வெசாக்நிகழ்வுகளில் கலந்து 
 கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்