(கல்லடி செய்தியாளர் & பிரதான ஆசிரியர் )
மட்டக்களப்பு கோட்டைமுனை
விளையாட்டுக் கழகம்,கோட்டைமுனை விளையாட்டுக் கிராமம் மற்றும் மட்டக்களப்பு
பாடசாலை கிரிக்கெட் அதிகார சபை ஆகியன ஒன்றிணைந்து நடாத்திய தெரிவு
செய்யப்பட்ட பாடசாலைக்கிடையிலான கிரிக்கெட் சவால் கிண்ணத்தை மட்டக்களப்பு
மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி சுவீகரித்துக் கொண்டது.
இதன்போது
முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி சகல
விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத்
துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலை அணி 18.2
ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்று
தோல்வியடைந்தது.
இதன்படி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி 99 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
இப்போட்டி மட்டக்களப்பு கோட்டைமுனைக் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
பிரதம அதிதிகளாக கல்லடி 243 ஆவது காலாட்படையின் அதிகாரி பிரிகேடியர்
சந்திம குமாரசிங்க மற்றும் கல்லடி 243 ஆவது காலாட்படை அதிகாரி லெப்டினன்ட்
கேணல் தம்மிக வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு கோட்டைமுனை அணி முக்கியஸ்தர்கள்,பாடசாலை அதிபர்கள் மற்றும் விளையாட்டுப் பொறுப்பாசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுத்
தொடரில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய
கல்லூரி,மட்டக்களப்பு புனித மிக்கேல் பாடசாலை,கல்லடி உப்போடை சிவானந்தா
தேசிய பாடசாலை மற்றும் கருவப்பங்கேணி விபுலானந்தா பாடசாலை ஆகிய பாடசாலை
அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.