அந்தவகையில் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி-3, மீராவோடை கிழக்கு ஆகிய இடங்களில் வட்டாரக் செயற்பாட்டு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டது.
இவ்விரு அலுவலகங்களும் கல்குடா ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கலாநிதி முசாமில் அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இவ்வாடரக் செயற்பாட்டு அலுவலகங்கள் ஊடாக மக்கள் தங்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் போன்றவற்றை ஜக்கிய தேசிய கட்சியின் உயர் பீடம் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளலாம் என கல்குடா ஜக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கலாநிதி முசாமில் இதன் போது தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மதகுருமார் உட்பட ஓட்டமாவடி பிரதேச ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்கள், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.








